சென்னையில் விடிய விடிய மழை:
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பல மணி நேரம் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வடமேற்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ள நிலையில் இரண்டாவது நாளே சென்னையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது
நேற்று நள்ளிரவு 2:00 மணி முதல் தற்போது வரை பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் அருகில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடுவதால் அந்த பகுதியில் வாகனங்கள் இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது
மேலும் சென்னையின் பல பகுதிகளில் மழை காரணமாக 3 அடி வரை மழை நீர் தேங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான்
மேலும் சென்னையின் முக்கிய பகுதிகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை வானிலை மையம் சற்றுமுன் அறிவித்தபடி இன்னும் மூன்று மணி நேரத்துக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் என்பது என்று கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது