Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (16:28 IST)
தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் லட்சத்தீவு பகுதிகளில்  காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments