வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியது. இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.