Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Mahendran
வெள்ளி, 15 நவம்பர் 2024 (13:15 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மழை பெய்து வரும் நிலையில், ஞாயிறு வரை இதேநிலை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தினந்தோறும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், மழை நிலவரம் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன், சென்னையில் ஞாயிறு வரை தினந்தோறும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். 
 
சென்னை நகரின் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ளது என்றும் இதே நிலைதான் ஞாயிறு வரை நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்தில் நாள்தோறும் மழை பெய்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை மக்கள் தினமும் அழகான மழையை காலையில் ரசிக்கலாம் என்றும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பகல் நேரங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அது மட்டும் இன்றி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும், இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments