கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

Siva
வெள்ளி, 15 நவம்பர் 2024 (12:03 IST)
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் இரவில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் காவல்துறை  அதிரடியாக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் தங்கி முருகனை வழிபாடு செய்வது பக்தர்களின் வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க காவல்துறை  தடை விதித்துள்ளது.

இன்று பௌர்ணமி என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், பலர் கடற்கரையில் தங்க முடிவு செய்துள்ளனர்.

பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் இரவில் தங்கக்கூடாது என்று திருச்செந்தூர் காவல்துறை  அறிவித்துள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடற்கரையில் தங்க வேண்டாம் என்று திருச்செந்தூர் காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments