Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (07:42 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அது மட்டுமின்றி இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் ஒரு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  கோவையில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல் கோவை காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments