Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: தென்மாவட்ட மக்கள் அச்சம்..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (14:13 IST)
தென் மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைந்து விடும் என்றும் இனி நிவாரண பணிகளை முழு வீச்சில் கவனிக்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் இன்று காலை கூறியிருந்த நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
ஏற்கனவே தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது என்பதும் பல பகுதிகளில் தரை தளம்  மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீண்டும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்னும் சில மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!

செந்தில் பாலாஜியின் புதிய மனுக்களின் விசாரணை எப்போது? நீதிமன்றம் அறிவிப்பு..!

சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..! எல்லை பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை..!!

உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்: தலைமறைவான போலே பாபா அறிக்கை

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.! திமுக பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments