11 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (13:36 IST)
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் தமிழகத்தில் உள்ள பல நீர் நிலைகள் நிரம்பி உள்ளதாகவும் அணைகளில் நீர்மட்டம்  உயந்துள்ளதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments