காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை..!

Mahendran
திங்கள், 25 நவம்பர் 2024 (11:43 IST)
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக உருவாகி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளதால் கனமழை பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும் என்றும், குறிப்பாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று, அதாவது நவம்பர் 27ஆம் தேதி முதல் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், நாளை மற்றும் நாளை மறுநாள் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments