9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
சனி, 19 அக்டோபர் 2024 (15:04 IST)
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளதை அடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
கடந்த சில நாட்களுக்கு முன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று அதிகாலை, சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து, சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில், அதாவது திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 இதனை அடுத்து, பொதுமக்கள் அவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும், இல்லை என்றால் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments