Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (15:13 IST)
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால், இன்று 16 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். மேலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஏப்ரல் 5ஆம் தேதி  நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், ஏப்ரல் 6 முதல் 8 வரை தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments