Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
புதன், 26 மார்ச் 2025 (15:45 IST)
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் பதிவாகும் என்றும் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
சென்னை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை இருக்காது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments