Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்ல.. எங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேணாம்! – தயங்கும் முன்கள பணியாளர்கள்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (14:43 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முன்கள பணியாளர்கள் சிலர் தங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என மறுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது.

முதலாவதாக இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் முன்கள பணியாளர்களின் விவரங்களும் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல தனியார் மருத்துவமனை பணியாளர்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் என்றும், தாங்கள் எந்த வித கொரோனா அறிகுறியும் இன்றி ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments