தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக தமிழகத்தில் இருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழையால் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதோடு, கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன், அனைத்து மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நோய் பரவலை தடுப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொளவும் வலியுறுத்தியுள்ளார்.