Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

Mahendran
புதன், 13 நவம்பர் 2024 (10:30 IST)
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் 50 வயது செல்வராஜ் என்பதும், இவர் பூந்தமல்லி கிளைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், செல்வராஜுக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது, அவர் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் சிறுநீரகத்தில் கல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், இதனை அடுத்து சிறையை மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. சிகிச்சை முடிந்த பிறகு, அவர் மீண்டும் பூந்தமல்லி கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments