Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர் !

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (19:17 IST)
நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரு.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த பழனிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  நேற்று இரவு நடந்த திடீரென சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் சீன எல்லையில் நேற்று இரவு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை என்ற பகுதி அருகே கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் தான் வீரமரணம் அடைந்தவர்களின் ஒருவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இவரின் வீரமரணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து டிவிடரில் பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில்,  நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரு.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், ராணும் வீரர் பழனி குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments