நிலமோசடி வழக்கில் பதில் அளிப்பதற்கு, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அவகாசம் வழங்கியுள்ளது.
செல்வி, தனக்குச் சொந்தமான 2.94 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ரூ. 3 கோடியே 50 லட்சம் பெற்றதாகவும், ஆனால், பத்திரம் பதிவு செய்து தராததுடன், நிலத்தையும் தராமல்மிரட்டியதாக சென்னை வளசர வாக்கத்தைச் சேர்ந்த வி. நெடு மாறன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி செல்வியை விடுதலை செய்தது. இதனால், நெடுமாறன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, செல்விக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இந்த நோட்டீஸ் வந்துசேரவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து, செல்விக்கு மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திங்களன்று நீதிபதிகள் ஜே.எஸ். கேஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது.
அப்போது பதில் மனுவைத் தாக்கல் செய்ய செல்வி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் செல்விக்கு மீண்டும் கால அவகாசம் கொடுத்து 6 வாரகாலத்துக்கு வழக்கை ஒத்திவைத்தது.