கூட்டுறவு சங்கத்தில் 44 லட்சம் போலி உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த போலி உறுப்பினர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம், சுமார் 44 லட்சம் பேர் போலியான உறுப்பினர்கள் இருந்தனர் என்றும் அவர்களை அடையாளம் கண்டு நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியதாக தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து, அரசுக்கு, அறப்போர் இயக்கம் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது
1. நீக்கம் செய்யபட்ட 44இலட்சம் உறுப்பினர்கள் பட்டியல் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.
2. போலியான 44இலட்சம் உறுப்பினர்களும் TNCS Act1983, பிரிவு 36இன் படி வாழ்நாள் தடை அறிவிக்கவேண்டும்.
3. போலியான 44இலட்சம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், தள்ளுபடிகள் போன்ற தொகைகள் உடனடியாக TNCS Act1983, பிரிவு87 இன் படி மீட்கப்படவேண்டும்.
4. போலியனவர்களை அங்கீகரித்த நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியாக மற்றும் TNCS Act1983 துணைவிதிகள் அடிப்படையில் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
5. போலியாக அவர்களை அங்கிகரித்த மற்றும் கடன்கள் வழங்கிய, மேலும் முறைகேடாக தள்ளுபடிகள் பெற்ற குற்றவாளிகள் மீது முதல் தகவலறிக்கை பதிந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.