Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகம் அழியப்போகல… அழிச்சுகிட்டு இருக்கோம் – ஹர்பஜன் சிங் ஆவேசம்!

உலகம் அழியப்போகல… அழிச்சுகிட்டு இருக்கோம் – ஹர்பஜன் சிங் ஆவேசம்!
, வெள்ளி, 3 ஜூலை 2020 (07:32 IST)
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிக்கு அருகே உள்ள ஏம்பல் எனும் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயபிரபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில்செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல, அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா" எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அளவில் 1.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு: இந்தியாவில் உச்சகட்டம்