Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீரம், புலி, மெர்சல், நேர் கொண்ட பார்வை: ஹர்பஜன்சிங் டுவீட்டின் அர்த்தம் என்ன தெரியுமா?

வீரம், புலி, மெர்சல், நேர் கொண்ட பார்வை: ஹர்பஜன்சிங் டுவீட்டின் அர்த்தம் என்ன தெரியுமா?
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (22:31 IST)
நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல்-செந்தாமரை என்ற முதிய தம்பதிகள் நேற்று தங்களுடைய வீட்டில் தனியாக இருந்த போது இரண்டு கொள்ளையர்கள் வந்து திடீரென அவர்களை தாக்கினர். இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட இந்த தம்பதிகள் இருவரும் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து திருடர்கள் மீது வீசியெறிந்து விரட்டி அடித்தனர்
 
 
இந்த முதிய தம்பதிககளின் வீரமான சண்டை காட்சி சிசிடிவி மூலம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது இரண்டு விஐபிக்கள் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். அவர் இதுகுறித்த வீடியோவை பார்த்து இந்த தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
 
அதேபோல் பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தம்பதியர் குறித்து கூறியதாவது: 'திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும். என்ன வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ர மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்டபார்வை. திருடர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய இருவருக்கும் பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார். ஹர்பஜன்சிங் இந்த டுவீட்டில் 'வீரம்', 'புலி', 'மெர்சல்', 'நேர் கொண்ட பார்வை' என அஜித், விஜய் படங்களை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
webdunia
இந்த இரண்டு விஐபிக்களின் பாராட்டுகளை அடுத்து இந்த முதிய தம்பதிகளுக்கு மேலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் இந்த தம்பதிகளை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து சமூக விரோதிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள்: இந்திய உள்துறை அமைச்சகம்