Publish Date: Sun, 01 Jan 2023 (08:10 IST)
Updated Date: Sun, 01 Jan 2023 (08:14 IST)
பிறந்தது புத்தாண்டு.. நாடு முழுவதும் கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
2022 ஆம் ஆண்டு விடை பெற்று இன்று முதல் 2023-ம் ஆண்டு பிறந்து உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை 3 மணிக்கு வடபழனி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் என்பதும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பெசன்ட் நகரில் உள்ள தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் இன்று ஏராளமான மக்கள் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் மெரினா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் ஏராளமான பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
2022ஆம் ஆண்டு பலருக்கு பல்வேறு சோதனையான ஆண்டாக இருந்தாலும் 2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.