Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்: அண்ணா பல்கலை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:53 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இந்த தேர்வுக்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்குவது குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
 
பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மறுதேர்வு நாளை துவங்க உள்ள நிலையில் acoe.annauniv.edu என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மாணவர்களின் மின்னஞ்சலுக்கும் ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பிரிண்ட் எடுத்து தேர்வு நடைபெறும் ஹாலுக்கு எடுத்துக் கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments