Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முட்டாள் மாதிரி பேசாதடா; ஃபோன வைடா: தொடரும் எச்.ராஜாவின் அநாகரிக பேச்சு!

முட்டாள் மாதிரி பேசாதடா; ஃபோன வைடா: தொடரும் எச்.ராஜாவின் அநாகரிக பேச்சு!

முட்டாள் மாதிரி பேசாதடா; ஃபோன வைடா: தொடரும் எச்.ராஜாவின் அநாகரிக பேச்சு!
, சனி, 1 ஏப்ரல் 2017 (16:30 IST)
சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவரை தேசத்துரோகி என திட்டிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தற்போது தொலைப்பேசியில் அதற்கு விளக்கம் கேட்ட ஒருவரை முட்டாள் என திட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது.


 
 
அந்த ஆடியோவில் உள்ள தகவல்:
 
எச்.ராஜா: அந்த நிரூபர் சரியில்லை, வரி கட்டுற என்கிட்ட நிரூபர் ஒழுங்கா பேசனும்.
 
நபர்: நான் கூட தான் வரி கட்டுறேன், அதற்காக நான் உங்கக்கிட்ட கேள்வி கேட்க கூடாதா?.
 
எச்.ராஜா: அதற்காக நிரூபர் என்ன வேணும்னாலும் பேசுவாரா, பிரதமரின் தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசக்கூடாது. கௌதமிய பார்ப்பாரு, காஜல பார்ப்பாருன்னு ஒரு பிரதமர தப்பா பேசுறாரு. அய்யாகண்ணு ஒரு பிராடு. ஆடி கார் வச்சிருக்க அய்யகண்ண பிரதமர் பாக்கனுமா?
 
நபர்: அய்யாகண்ணு அவருக்காக போராடல, மொத்த விவசாயிகளுக்காக போராடுறாரு.
 
எச்.ராஜா: 20, 25 வருஷமா எனக்கு அய்யாகண்ண தெரியும், அவர் ஒரு பிராடு, கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்காம இருக்க அய்யாகண்ணு ஒரு பிராடு.
 
நபர்: விஜய் மல்லையாவும் பிராடு தான, அவர பிரதமர் இதுவர பார்த்ததில்லையா?
 
எச்.ராஜா: விஜய் மல்லையாவ அரெஸ்ட் பண்ண ஆர்டர் வாங்கியிருக்கோம். சோனியா காந்தி, மன்மோகன் தான் அவருக்கு 8000 கோடி கடன் கொடுத்தாங்க.
 
நபர்: அது மக்களுடைய வரி பணம். கடனை வசூலிக்கிறது உங்க கடமை தான். நீங்க அம்பானி, அதானிக்கு எல்லாம் கடன் கொடுத்ததில்லையா?
 
எச்.ராஜா: இடியட் (முட்டாள்) மாதிரி பேசாதடா, போன கட் பண்ணுடா முதல்ல.
 
நபர்: மரியாதையா பேசுங்க சார், நான் இவ்ளோ நேரம் மரியாதையா தானே பேசுறேன்.
 
இவ்வாறு அந்த தொலைப்பேசி உரையாடல் அமைந்திருந்தது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளமான வாட்ஸ்ஆப்பில் வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியை நோக்கி வரும் விண்கல்: நேரடியாக காணலாம்!!