Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பானி பூரி விற்க வந்தாங்களா?: கிண்டல் செய்த எச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

பானி பூரி விற்க வந்தாங்களா?: கிண்டல் செய்த எச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Advertiesment
பானி பூரி விற்க வந்தாங்களா?: கிண்டல் செய்த எச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
, வியாழன், 21 செப்டம்பர் 2017 (12:50 IST)
சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரிய வழக்கும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


 
 
இந்த வழக்கில் பல்வேறு தரப்பினர்களுக்காக வாதாட வட இந்தியாவில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதனால் நேற்று நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதில் திமுக சார்பில் வாதாட கபில் சிப்பல், தினகரன் தரப்புக்கு வாதார சல்மான் குர்ஷித் போன்ற வட இந்தியாவை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.
 
இதனை விமர்சித்து ஏன் தமிழக வழக்கறிஞர்களை வாதாட அழைக்கவில்லை என்ற தொனியில் கிண்டலாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், திமுகவிற்கு கபில் சிப்பல், டிடிவிக்கு சல்மான் குர்ஷித், அதிமுகவிற்கு முகுல் ரோத்தகி இவர்கள் உயர் நீதிமன்றத்தில் பானி பூரி விக்க வந்தாங்களா என கிண்டலாக கேள்வி எழுப்பினர்.

 
இதனையடுத்து அவரது இந்த டுவீட்டுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் எச்.ராஜா சாரணர் இயக்க தேர்தலில் தோல்வியடைந்ததை அதில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவை உயிரோடு கடைசியாக பார்த்த நாள் இன்று!