Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேறு வழியில்லை: தூத்துகுடி துப்பாக்கி சூடு குறித்து எச்.ராஜா

Advertiesment
வேறு வழியில்லை: தூத்துகுடி துப்பாக்கி சூடு குறித்து எச்.ராஜா
, செவ்வாய், 22 மே 2018 (17:29 IST)
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் பலியான விவகாரம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தமிழக அரசுக்கும் காவல்துறையினர்களுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறை துப்பாக்கி சூட்டை தவிர்த்திருக்கலாம் என்றும் அல்லது கலவரத்தை அடக்க ரப்பர் குண்டுகள் பயன்படுத்தி சுட்டிருந்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டிகே ரெங்கராஜன் என்பவர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ளா பாஜகவின் எச்.ராஜா, 'போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை' என்று பதிவு செய்துள்ளார். எச்.ராஜாவின் இந்த பதிவிற்கு டுவிட்டரில் கடும் கண்டனங்களை பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
 
99 நாட்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் இன்று மட்டும் வன்முறை வெடித்தது ஏன்? என்ற கேள்வியே அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமீர் இயக்கத்தில் விஜய்?