நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அவர் சபாஷ் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து 20 வருடங்களுக்கு பின்னர் அது நடந்திருக்கிறது. பல்வேறு கால கட்டங்களில் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவிய ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.
தனது ரசிகர்கள் மத்தியில் நேற்று பேசிய ரஜினி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவித்து அரசியல் களத்தை பற்றவைத்தார். மேலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் சர்ச்சைக்கு வித்திட்டார்.
ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண், அடியே மீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண் ஆனால் இங்கு ஆன்மீக அரசியல் சபாஷ் என தெரிவித்துள்ளார்.