திமுக கோட்டையில் குத்து வெட்டு; நல்ல தொடக்கம்! – எச்.ராஜா ட்வீட்!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (11:36 IST)
திமுக எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்துள்ள நிலையில் திமுகவில் உள் பூசல்கள் எழ தொடங்கியுள்ளதாக எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் திமுக பிரமுகர்கள் திமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், மேலும் சில திமுக பிரமுகர்களும் பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் திமுகவில் குடும்ப அரசியல் அதிகரித்து விட்டதாக கு.க.செல்வம் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் திறமையானவர்களுக்கு மதிப்பில்லை என்ற பேச்சு எழுந்துள்ளதாக கட்சி உள் வட்டாரத்தில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எச்.ராஜா “ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.க. செல்வம் அவர்களின் கருத்து தமிழக மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அவரை இடைநீக்கம் செய்த திமுக கோட்டையில் குத்து வெட்டு துவக்கம். நல்லது இன்றே துவங்குவது சிறப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

கு.க.செல்வம் வெளியேறியதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என்று திமுகவினர் கூறினாலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி பிரமுகர்கள் இவ்வாறாக வேறு கட்சிக்கு தாவுவது பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதி அறிவுரை..!

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.32 லட்சம்.. யார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்?

அவங்களை பாத்து ஆறுதல் சொல்லணும்! மீண்டும் கரூர் செல்லும் விஜய்? - நிர்வாகிகளுடன் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments