திமுக பொதுசெயலாளர் பதவி தரப்படாததால் துரைமுருகன் வருத்தத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் துரைமுருகன்.
திமுக கட்சியின் பொருளாளராக இருந்து வருபவர் துரைமுருகன். கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான இவர் திமுக பொதுசெயலாளர் அன்பழகன் மறைவை தொடர்ந்து அந்த பதவிக்கு போட்டியிட இருந்தார். கட்சி செயற்குழு கூட்டத்திலும் கிட்டத்தட்ட இந்த முடிவு எட்டப்பட்ட நிலையில் கொரோனா போன்ற பிரச்சினைகளால் பதவி தேர்ந்தெடுப்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பொதுசெயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் விரக்தியில் இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள துரைமுருகன் “எனது கல்லூரி காலத்திலிருந்தே திமுகவில் இருந்து வருகிறேன். திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தெனே தவிட பதவி ஆசைகளால் அல்ல. பொதுசெயலாளர் பதவி எனக்கு கிடைக்காவிட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல் அடிப்படை உறுப்பினராக கூட கட்சிக்கான தொண்டை செய்வேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்” என கூறியுள்ளார். மேலும் தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.