Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஓட்டு பிச்சைக்காக செயல்படுகிறார் சீமான்” ஹெச்.ராஜா ஆவேசம்

Arun Prasath
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (12:33 IST)
அரசியல் ஓட்டு பிச்சைக்காக செயல்படுகின்ற சீமான் போன்ற பிரிவினைவாதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என பாஜக  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதை தொடர்ந்து இரு குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை குறித்து பாஜக கண்டனம் தெரிவித்து வந்தது. நம்முடைய தமிழ் மக்களை தவறாக தூண்டிவிட்டு அரசியல் ஓட்டுப்பிச்சைக்காக செயல்படுகின்ற சீமான் போன்ற மோசமான பிரிவினைவாத சக்திகளின் மீது அரசாங்கமும் காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பாஜகவையோ மோடியையோ விமர்சிப்பவர்களை எப்போதும் தேச துரோகிகள் என கூறி வரும் ஹெச்.ராஜா, தற்போது ராஜீவ் காந்தி கொலை குறித்தான சர்ச்சை பேச்சை தொடர்ந்து சீமானை பிரிவினைவாத சக்தி என விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவிழாவில் புகுந்த திருடன் ! பிடிக்க வந்த SPD பவர் ரேஞ்சர்ஸ்!

தமிழகத்தில் 3 நாட்கள் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கத்திரிக்காய் விலை வீழ்ச்சி.. டிராக்டரை வைத்து செடியை அழிக்கும் விவசாயிகள்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments