பாஜகவின் நடவடிக்கையை முதல்வரால் தாங்க முடியாது: சீறும் எச்.ராஜா!
பாஜகவின் நடவடிக்கையை முதல்வரால் தாங்க முடியாது: சீறும் எச்.ராஜா!
Publish Date: Mon, 11 Dec 2017 (16:52 IST)
Updated Date: Mon, 11 Dec 2017 (16:55 IST)
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் புதுச்சேரி ஆளுநர் நாராயணசாமியால் பாஜகவின் நடவடிக்கையை தாங்க முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா முதல்வர் நாராயணசாமியை கடுமையாக சாடினார். அப்போது அவர், ஆளுநருக்கு சட்டப்படி செயல்பட முழு அதிகாரம் உள்ளது. மாநில அரசின் நிர்வாக திறமையின்மையின் காரணத்தால் மத்திய அரசுடன் மோதல் போக்கை முதல்வர் நாராயணசாமி கடைபிடித்து வருகிறார்.
ஆளுநர் செல்லும் இடங்களுக்கு மக்களை தூண்டிவிட்டு பிரச்சினை ஏற்படுத்துவது முதல்வர் நாராயணசாமிக்கு அழகல்ல. இதை காங்கிரஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கையை முதல்வர் நாராயணசாமியால் தாங்க முடியாது என எச்சரித்தார்.