Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் தீர்ப்பு வந்துவிடுமோ? என்று பயமாக உள்ளது: பட்டாசு தீர்ப்பு குறித்து எச்.ராஜா

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (07:21 IST)
நேற்று சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட பட்டாசு குறித்த தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு தயாரிக்க மற்றும் வெடிக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்திருப்பது அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ராஜபாளையத்தில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பதுதான் வழக்கம். ஆனால் இரவு 8 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று

இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்துவிடுமோ' என்ற பயம் ஏற்படுகிறது என்று எச்.ராஜா கூறியுள்ளார். ஏற்கனவே சமீபத்தில் தான் நீதிமன்றங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா. இந்த நிலையில் மீண்டும் தீர்ப்பு குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments