தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் வெடிக்க இருக்கும் டைம்பாம்: எச்.ராஜா சூசகம்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (16:24 IST)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.
 
தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்தது.
 
இதனையடுத்து தினகரனின் வெற்றி ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும், அது பணம் கொடுத்து பெறப்பட்ட வெற்றி எனவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரனின் வெற்றி செல்லுமா என்பது கூட சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
 
கடந்த 29-ஆம் தேதி எம்எல்ஏவாக சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்ட தினகரன் தனது முதல் சட்டசபை கூட்டத்தில் வரும் 8-ஆம் தேதி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தினகரனின் வெற்றி குறித்து சூசகமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
 
தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது. ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக நாளை இரவுக்குள் டைம்பாம் வெடிக்கலாம் என சூசகமாக எச்.ராஜா கூறியுள்ளது அரசியல் வட்டாராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments