Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி தீர்ப்பில் திமுகவுக்கு ஆப்பு தான்: எச்.ராஜாவின் தீர்க்கதரிசனம்!

2ஜி தீர்ப்பில் திமுகவுக்கு ஆப்பு தான்: எச்.ராஜாவின் தீர்க்கதரிசனம்!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (11:40 IST)
இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் எனவும் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மீது குத்தப்பட்ட கரும்புள்ளியாகவும் இருந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வர இருக்கிறது.


 
 
கடந்த 8 வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஆகஸ்டில் வழங்கு இருக்கிறது டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம். இந்த வழக்கின் தீர்ப்பை தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.
 
திமுக, காங்கிரஸ் ஆட்சிகளின் மாற்றத்திற்கு வித்திட்ட வழக்கு இது என்பதாலும், மிகப்பெரிய தொகை இந்த ஊழில் கூறப்படுவதாலும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனமொழியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவும் இந்த வழக்கில் சிக்கியிருப்பதால் இந்த வழக்கு அதிமுக்கிய வழக்காக பார்க்கப்படுகிறது.
 
ஆகஸ்டில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என சூசகமாக சில கருத்துக்களை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். 2ஜி வழக்கில் வரும் தீர்ப்பு தமிழகத்துக்கே நல்ல செய்தியாக இருக்கும். பெரிய விடிவு காலம் கிடைக்கும். திமுக ஊழலின் ஊற்றுக்கண் என எச்.ராஜா கூறியுள்ளார்.
 
இதற்கு முன்னர் ஆர்.கே.நகர் தேர்தலின் போதும், அதிமுக விவகாரங்களின் போதும் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் பல கருத்துக்களை முன் கூட்டியே கூறுவார். அதவும் அப்படியே நடக்கும். இதனால் பாஜக ஆளும் கட்சியா இருப்பதால் அவர்களுக்கு முன் கூட்டியே தகவல்கள் கிடைக்கிறது என பரவலாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் பாஜகவுக்கு 2ஜி தீர்ப்பு குறித்து ஏதாவது தகவல் கிடைத்துள்ளதா? அதை வைத்து தான் எச்.ராஜா சூசகமாக இந்த தகவலை கூறுகிறாரா? அதிமுகவை சிதைத்ததை போல திமுகவையும் பாஜக துண்டாட நினைக்கிறதா என அரசியல்களத்தில் விவாதிக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments