Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த நடிகைகள்தான் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் - நடிகர் சர்ச்சை கருத்து

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (11:28 IST)
திறமையில்லாத நடிகைகள்தான் வாய்ப்பிற்காக மற்றவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள் என கேரள நடிகர் இன்னொசெண்ட் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பொதுவாக சில நடிகைகள் வாய்ப்பிற்காக சினிமா துறையினரிடம் படுக்கையை பகிர்ந்து கொள்வதாக காலம் காலமாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. சில நடிகைகளும் தங்களிடம் பலர் தவறாக நடக்க முயன்றதாக பகீரங்கமாக கூறி வருகின்றனர்.
 
கேரள சினிமா நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது அதிகம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே நடிகை பார்வதி மேனன் உள்ளிட்ட சில நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலயில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும், எம்.பி.யுமான இன்னொசெண்ட் “மலையாள சினிமா உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கிடையாது. இதுவரை எங்களுக்கு அப்படி எதுவும் புகார் வந்தது கிடையாது. மோசமான பெண்கள்தான் வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள்” எனக் கூறினார்.


 

 
இந்த கருத்து கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்தை கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
கேரள சினிமா உலகின் பிரபலமான நடிகர் இன்னொசெண்ட், மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments