Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘எலும்பு வல்லுநர்’ பரவாயில்லை: எச்.ராஜா டுவிட்டரில் பதிலடி!

‘எலும்பு வல்லுநர்’ பரவாயில்லை: எச்.ராஜா டுவிட்டரில் பதிலடி!

Advertiesment
‘எலும்பு வல்லுநர்’ பரவாயில்லை: எச்.ராஜா டுவிட்டரில் பதிலடி!
, வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (18:03 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை டுவிட்டரில் ஒருவர் எலும்பு வல்லுநர் என கிண்டலடித்துள்ளதற்கு அவர் எலும்பு வல்லுநராக இருப்பது பரவாயில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முதுகெலும்பில்லாத கோழை என கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் கமல் அதில் எச்.ராஜாவை எலும்பு வல்லுநர் தம்பி எச்.ராஜா என குறிப்பிட்டிருந்தார்.

 
இதனையடுத்து சமூக வலைதளங்களில் எச்.ராஜாவை பலரும் எலும்பு வல்லுநர் என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று முந்தினம் டுவிட்டரில் நீட் குறித்த ஒருவரின் கருத்துக்கு எச்.ராஜா பதில் கூறியிருந்தார். அதில் ஒரு டுவிட்டர் பயனாளி எச்.ராஜாவை எலும்பு வல்லுநர் என கிண்டலடித்திருந்தார்.
 
அவரது கிண்டல் பதிவுக்கு பதில் அளித்த எச்.ராஜா, எலும்புத் துண்டுக்காக வாழ்வதைவிட எலும்பு வல்லுநர் பரவாயில்லை என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ்!