இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை சட்டத்தில் இடமளிக்காதது ஏன் என எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமை சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ள நிலையில் அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
குடியுரிமை பெற தகுதியுடையோர் பட்டியலில் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் இணைக்கப்படாதது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை மசோதா குறித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ”குடியுரிமை சட்ட மசோதாவால் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட போவதில்லை. குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்த்துவிட்டால், அதற்கு பிறகு இலங்கை அரசு அவர்களை விரட்டியடிக்க தொடங்கிவிடும் என்பதாலேயே அவர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.