Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் கடிதத்தால் காண்டான எச்.ராஜா? டைம் பாத்து ரிவீட்!!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (10:15 IST)
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கமலை மறைமுகமாக சாடியுள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 169 லிருந்து 199 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 478 லிருந்து 504 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட பல நாட்டின் அரசுகள் அவசரகால அதிகாரங்களை கையிலெடுத்துள்ளனர். அரசை விமரிசிக்க  முடியாது. விமர்சித்தால் உடனே சிறைதான். ஆனால் இங்கு நான் எழுதித் தரேன் மோடிக்கு கொரோனா இருக்கு அவனை டெஸ்ட் பன்னு னு பேச முடியும். இல்லாத பிரச்சனைகள் உள்ளதாக விவாதிக்க முடியும்.  ஒன்னுமே புரியாத கடிதமும் என குறிப்பிட்டுள்ளார். 
 
இது நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சாடுவதாக தெரிகிறது. ஏனெனில் அவர் தான் பிரதமர் மோடி இரண்டு முறை ஊரடங்கு குறித்து கடிதம் எழுதி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments