கடந்த கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 17 பேர் உயிரிழப்பு என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன.
மருத்துவர்கள், காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை மறந்து கொரோனா பாதித்தவர்களை மீட்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிபு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 5,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 472 பேர் குணமடைந்துள்ளனர், 166 பேர் மரணித்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் 1,297 பேரும், தமிழகத்தில் 738 பேரும், டெல்லியில் 669 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 17 பேர் உயிரிழப்பு, 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.