Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியலை விட்டு போக தயார்: எச்.ராஜா சவால்!

அரசியலை விட்டு போக தயார்: எச்.ராஜா சவால்!

Advertiesment
அரசியலை விட்டு போக தயார்: எச்.ராஜா சவால்!
, செவ்வாய், 20 ஜூன் 2017 (11:59 IST)
தமிழக பாஜக மூத்த தலைவரும், பாஜக தேசிய செயலாளருமான எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறுவதில் பிரபலம். இவர் தற்போது பிரதமர் மோடி மக்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என கூறவில்லை என தெரிவித்துள்ளார்.


 
 
அப்படி பிரதமர் மோடி கூறியதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே போகிறேன் என கூறியுள்ளார். திருச்சி மண்டலம் சார்பாக கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் இணைவோம் அனைவரும் வளர்வோம் என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது எச்.ராஜா இவ்வாறு பேசினார்.
 
அப்போது பேசிய எச்.ராஜா, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை விமர்சிக்க அவர்களுக்கு எள்ளளவும் தகுதியில்லை. உண்மைக்கு புறம்பாக திருமாவளவன் பிரதமர் மோடியை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என எச்.ராஜா கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி மக்களோட வங்கிக் கணக்கில் பணம் போடுவதாக எப்போதும் சொல்லவே இல்லை, அப்படி அவர் சொன்னதாக யாரும் நிரூபித்தால், அரசியலைவிட்டே நான் போய்விடுகிறேன். நிரூபிக்க முடியலைன்னா, நீங்க மீடியா வேலையை விட்டு போக தயாரா? என்று ஊடகங்களுக்கு சவால் விட்டார் அவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண் காரில் கடத்தி கற்பழிப்பு : சாலையில் வீசி சென்ற கொடூரம்