Publish Date: Mon, 22 Oct 2018 (11:04 IST)
Updated Date: Mon, 22 Oct 2018 (11:18 IST)
ஹைகோர்ட்டையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசியது தவறு தான் என ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹெச்.ராஜா, தான் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டதாகவும், தன் தவறை உணர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீதான அவதூறு வழக்கை முடித்து வைத்தது.