Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச்.ராஜா பேசுர பேச்சை கொஞ்சம் கேளுங்க (வீடியோ இணைப்பு)

Advertiesment
எச்.ராஜா பேசுர பேச்சை கொஞ்சம் கேளுங்க (வீடியோ இணைப்பு)
, செவ்வாய், 9 ஜனவரி 2018 (16:25 IST)
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து தினமணியில் ஆற்றிய கட்டுரை ஒன்றின் போது ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர், ஆண்டாள் என்ற பாத்திரம், திருவரங்கத்திலேயே வாழ்ந்து மடிந்த ஒரு தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார்.
 
இந்த கருத்துக்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்து மட்டுமல்லாமல் தினமணியும் சேர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசி வருகிறார்.

நன்றி: RedPix
 
ஆண்டாள் குறித்த இந்த விமர்சனத்தால் கடும் கோபத்தில், அதன் உச்சிக்கே சென்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு தேசிய கட்சியின் தேசிய பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவர் இப்படி எல்லாம் நாகரீகமற்ற முறையில் பேசலாமா என கேட்க தோனும் அளவுக்கு கடும் கோபத்தில் இந்த வீடியோவில் பேசுகிறார் எச்.ராஜா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 வயது குழந்தையை ஆவேசமாய் தாக்கிய கொடூர தாய்: அதிர்ச்சி வீடியோ!!