Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையான உடற்பயிற்சி எதிரொலி: ரத்த வாந்தி எடுத்து சென்னை ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு..

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (11:43 IST)
கடுமையான உடற்பயிற்சி செய்ததன் காரணமாக சென்னையை சேர்ந்த ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் ஆகாஷ். 25 வயதான இவர், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ச்சி செய்து வந்ததாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி  அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ரத்த வாந்தி எடுத்ததை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கட்டுமஸ்தான உடலுக்காக ஆகாஷ் அதிக அளவு ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொண்டதாகவும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments