2000ஐ தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு.. மீண்டும் வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சம்..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (11:38 IST)
இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்து சில மாதங்களாக ஆயிரத்திற்கும் குறைவாக தினசரி பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதி இருந்தது. 
 
இந்த நிலையில் இந்திய அளவில் தற்போது தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 2000ஐ தாண்டி உள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 1500 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் இன்று 2151 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை.. இன்று காலை முடிந்தது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments