Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயன்ற விவகாரம்: இருவர் கைது!

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (10:28 IST)
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயன்றதாக நேற்று புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மூன்று இரு சக்கர வண்டிகளில் 6 பேர் வந்து குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயன்றது தெரியவந்தது 
 
இதனை அடுத்து காவல்துறை உயரதிகாரிகள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குருமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவரது பாதுகாப்பை உறுதி  செய்வதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்
 
இந்த நிலையில் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியபோது, இந்த விவகாரத்தில் காவல்துறையினர் இரண்டு பேர்களை கைது செய்து இருப்பதாகவும் அவர்கள் தமிழ் தீவிரவாதிகள் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் நான் புகார் அளித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல் துறை உயரதிகாரிகள் வீட்டிற்கே வந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்ததற்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார் மேலும் துக்ளக் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார் 
 
கைதுசெய்யப்பட்ட இருவர் யார்? அவர்களிடம் என்ன எந்தவிதமான விசாரணை நடந்து வருகிறது என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

காலம் மாறும்.. அப்போ உங்களுக்கு தண்டனை நிச்சயம்! - தேர்தல் அதிகாரிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments