Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. குடுக்குறதை வாங்கிப்போம்! – காங். குண்டுராவ்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:38 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கீட்டில் பேரம் பேசாது என குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தலில் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் “தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வோம். தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசும் எண்ணமில்லை. வழக்கமான ஆக்கப்பூர்வமான ஆலோசனை கூட்டத்தின் மூலம் தோழமை கட்சிகளோடு ஒற்றுமையை காப்போம். மேலும் தேர்தல் குறித்த ஆய்வில் திமுகவிற்கு 100 இடங்களில் பலத்த போட்டி இருக்கும் என தெரிகிறது. அந்த தொகுதிகளில் திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் தீவிரமாக செயல்படும்” என கூறியுள்ளார்.

முன்னதாக பீகார் தேர்தலில் காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்தித்த நிலையில் குண்டுராவ் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments