Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (17:02 IST)
தமிழகம் முழுவதும் பள்ளிக்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பொதுசுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாக மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்ததால் இந்த மாத இறுதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை பள்ளிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே வழிகாட்டு நெறிமுறைகள் பொதுசுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
# 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் 
# ஆசிரியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திருக்க வேண்டும்
# பள்ளிகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்
# நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்
# மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கூட்டமாக அமர வேண்டாம்
# ஆசிரியர்களும், மாணவர்களும் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
# 2 முறை கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்
# வகுப்பறை நுழையும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
# கொரோனா பரிசோதனை செய்திருந்தால் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments