தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (15:01 IST)
தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சற்று முன் தமிழக அரசு வெளியீட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:
 
50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும்,  மாணவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்றும், பள்ளியில் கை கழுவுவதற்கு சோப்பு கிருமிநாசினி அளிக்கவேண்டும் என்றும், பள்ளிகள் திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றும், பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் 100% தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 20ல் டாடா வெளியிடும் Punch EV காரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு.. என்னென்ன சிறப்புகள்..

தொழுகை முடிந்ததும் தற்கொலைப்படை தாக்குதல்.. பாகிஸ்தானில் 25 பேர் பலி..!

ஆட்சிக்கே வரல.. அதுக்குள்ள அலப்பறையே!.. தவெக மீது புகார் சொல்லும் பனையூர் வாசிகள்!...

சம்பாதிச்சா வரி கட்டி தானே ஆகணும்.. விஜய் வருமான வரி வழக்கு குறித்து தமிழிசை சௌந்தரராஜன்..!

இப்பதான் விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறோம்.. அடுத்ததாக ட்ரம் அடிப்போம்.. விஜய் வருமான வரி வழக்கு குறித்து நயினார் நாகேந்திரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments