பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது.
அந்தவகையில் வருகிற ஜன.19 முதல் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு...
1. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.
2. தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
3. பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
4. வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
5. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
6. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.
7. பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.
8. மாணவர்களை பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது.
9. வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
10. உடற்கல்வி விளையாட்டு பாட வேளைகள், என்சிசி, என்எஸ்எஸ் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.