Publish Date: Sat, 09 Mar 2024 (22:20 IST)
Updated Date: Sat, 09 Mar 2024 (22:25 IST)
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கல் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் நாடு பொதுசுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.