Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தி.நகர் வசந்த் அன் கோ, சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் திடீர் சோதனை

Advertiesment
தி.நகர் வசந்த் அன் கோ, சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் திடீர் சோதனை
, செவ்வாய், 27 மார்ச் 2018 (15:01 IST)
சென்னை தி.நகர் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சரவணா ஸ்டோர்ஸ் கடைதான். தி.நகர் ரெங்கநாதன் தெருவையே கிட்டத்தட்ட வளைத்துவிட்ட சரவணா ஸ்டோர்ஸ் கடைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில்  ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டுமின்றி வசந்த் அன் கோ மற்றும் ஹாட்சிப்ஸ் கடைகளிலும்  ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டும் சுமார் ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்திருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாகவும், சென்னையில் மொத்தம் 6 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது. சோதனை முடிந்த பின்னரே எந்த அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தெரியவரும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அய்யாக்கண்ணு பேட்டி